Sunday, January 22, 2017

( Video ) ஏன் வேலை கிடைப்பதில்லை - காரணம் 01

Educating Video Series 01 by Jaffnaonline.info [The first and large business directory and job bank of North ]

சுய விபரக்கோவை எடுத்து வராமை மற்றும் சும்மா அடுத்தவருடைய சுயவிபரக்கோவையை அப்படியே பிரதி செய்து வருபவர்களாகவே 60-70 வீதமான தொழில் தேடுவோர் காணப்படுகின்றனர். அலுவலகத்துள் கதிரயைில் அமர்ந்து செய்யும் வேலைக‌ள் நல்ல சம்பளத்துடன் எதிர்பார்க்கும் இளைஞர் யுவதிகள் தாங்களும் அதற்குரிய முயற்சியை தம் அளவில் செய்திருப்பதையும் தாம் வேலை தேடுவதில் எவ்வளவு அக்கறையுடன் இருக்கிறன்றனர் என்பதைக் காட்டவும் பொறுமையாக உண்மையான தகவல்களுடன் தயாரிக்கப்பட்ட சுய விபரக்கோவைகள் உதவும்.இங்கு இடப்பட்டுள்ள வீடியோ உண்மையிலேயே நடாத்தப்பட்ட நேர்முகத்தேர்விலிருந்து   பங்குபற்றுபவர்களின் எழுத்து மூலமான அனுமதியுடன் கற்பித்தல் நோக்கங்களுக்காக எடுக்கப்பட்டுள்ளது




தினசரி குறைந்தது 6-7 நேர்முகத்தேர்வுகளை நடாத்தும் அதிகாரி தொடர்ந்தும்  நன்கு கற்றவர்கள் என்று சொல்லப்படும் நபர்கள்கூட (  பல்கலைக்கழக பட்டதாரிகள் )  சுயவிபரக்கோவைகள் இன்றி சான்றிதழ்களை அப்படியே கோப்பில் எடுத்துவருவதையும் அதில் பெரும்பான்மையோர்  முறையாகத் தயார் செய்யப்படாத சுய விபரக்கோவைகளை எடுத்து வருவதையும் (கொப்பி அன்ட் பேஸ்ற்)கண்டு வெறுத்துப்போய் பேசுவதைக்காணலாம். 

கடந்த 7 வருடங்களாக எங்களது முகப்புத்தகம் (facebook.com/jaffnaonline ) மற்றும் மற்றைய ஊடகங்கள் ஊடாக (எங்கள் இணையப்பக்கத்திலும் jobs.jaffnaonline.info ) சுயவிபரக்கோவை தயாரிக்கும் முறைகளையும் அதன் முக்கியத்துவம் பற்றியும்  சொல்லி வருகிறோம்.


இது எமது இளைஞர் யுவதிகளிற்கு அறிவூட்டுவதற்காக பதிவிடப்பட்டுள்ளது.

Follow Jaffnaonline on Facebook for hot jobs : facebook.com/jaffnaonline

No comments:

Post a Comment