Sunday, January 22, 2017

( Video ) ஏன் வேலை கிடைப்பதில்லை - காரணம் 01

Educating Video Series 01 by Jaffnaonline.info [The first and large business directory and job bank of North ]

சுய விபரக்கோவை எடுத்து வராமை மற்றும் சும்மா அடுத்தவருடைய சுயவிபரக்கோவையை அப்படியே பிரதி செய்து வருபவர்களாகவே 60-70 வீதமான தொழில் தேடுவோர் காணப்படுகின்றனர். அலுவலகத்துள் கதிரயைில் அமர்ந்து செய்யும் வேலைக‌ள் நல்ல சம்பளத்துடன் எதிர்பார்க்கும் இளைஞர் யுவதிகள் தாங்களும் அதற்குரிய முயற்சியை தம் அளவில் செய்திருப்பதையும் தாம் வேலை தேடுவதில் எவ்வளவு அக்கறையுடன் இருக்கிறன்றனர் என்பதைக் காட்டவும் பொறுமையாக உண்மையான தகவல்களுடன் தயாரிக்கப்பட்ட சுய விபரக்கோவைகள் உதவும்.இங்கு இடப்பட்டுள்ள வீடியோ உண்மையிலேயே நடாத்தப்பட்ட நேர்முகத்தேர்விலிருந்து   பங்குபற்றுபவர்களின் எழுத்து மூலமான அனுமதியுடன் கற்பித்தல் நோக்கங்களுக்காக எடுக்கப்பட்டுள்ளது

Sunday, August 21, 2016

நிறுவன அபிவிருத்தி உத்தியோகத்தர் - நிர்வாக முகாமையாளரின் காரிய தரிசி :Business Development Officer / Secretary for the MD

முன்னணி தனியார் நிறுவன மொன்றில் மேற்படி பதவி வெற்றிடம் உள்ளது.



நேர்முகத்தேர்வினில் பின்வருவனவற்றை ஒத்த கேள்விகள் கேட்கப்படும்

பின்வரும் கேள்விகளுக்கு நல்ல பதில்களை அளிக்கக் கூடிய வகையில் உங்கள் அறிவு மற்றும் அனுபவத்திறன் இருக்குமானால் (அனைத்துக்‌கேள்விகளையும் வாசித்து முடித்து விட்டு எம்மைத்தொடர்பு கொள்ளவும் )


1) வருவதற்கு முன்னர் எம்மைப்பற்றி அறிவதற்காக எமது நிறுவனத்தின் வெப்சைட்டைப் பார்வையிட்டீர்களா ?
2) எமது நிறுவனம் எவ்வாறான பணிகளில் ஈடு படுகிறது ?
3)எமது நிறுவனத்தின் முழுப்பெயர் சுருக்கமான குறியீட்டுப்‌பெயர் எவை ?
4)எமது நிறுவனத்தின் மிகப்பிரபலமான  சேவைகள் அல்லது உற்பத்திகள் சிலவற்றைக் குறிப்பிட்டு அவை ஏன் பிரபலம் என நீங்கள் கருதுவதையும் குறிப்பிட முடியுமா ?
5) நேர் முகத்தேர்விற்காக காத்திருக்கையில் உங்கள் முன் காணப்பட்ட எமது நிறுவனத்தின் துண்டுப்பிரசுரங்கள் - அறிவிப்புப்பலகைகள் என்பவற்றை வாசித்தீர்களா ?

Wednesday, August 10, 2016

இது ‌ஐப்னாஒன்லைன் முகப்புத்தகப்பக்கத்தில் பதிவிடப்பட்டது. பல இணையத்தளங்கள் எங்கள் பெயர் குறிப்பிடாமல் இதை மீள் பிரசரம் செய்துள்ளன. ”யார் குத்தியும் அரிசியானால் சரி” என்பது போல் நல்ல கருத்துக்கள் எவர் மூலமாகப்பரவினாலும் சரி.


அன்புள்ள புலம் பெயர் உறவுகளே!

தயவு செய்து தண்டச்சோறு தின்ன பணம் அனுப்ப வேண்டாம். வெறுமனே எந்த உடலுழைப்புமின்றி வெறும் வாங்கித்தின்னும் சமூகமாக எம்மை மாற்ற வேண்டாம்.
யாழ்ப்பாணத்தில் வேலைவாய்ப்புக்கள் கொட்டிக்கிடக்கிறது. ஆனால் வேலை செய்யத்தான் ஆட்கள் இல்லை .
”.அந்த வேலை அப்படி,இந்த வேலை இப்படி ,எனது படிப்புக்கேற்ற வேலை இல்லை இது...படித்துக்கொண்டே வேலை செய்வதா ? ” என்றே பெரும்பாலான வேலை தேடுவோர் இங்கு கேட்கின்றனர். தினசரி பல வேலை தேடுவோரை நேர் முகத்தேர்வுகள் மூலம் சந்திப்பதால் நாம் இதை நன்கறிவோம். அரச உத்தியோகம் மற்றும் கிளார்க் உத்தியோகம் என்ற இரண்டையே குறி வைத்து இவர்களது கேள்விகள் அமைகிறது. (வெளியே போற வேலை எண்டா வேண்டாம்..ஓபீசுக்கேயே இருந்து செய்யிறமாதிரி வேலை எண்டாத்தாங்கோ ..)

Thursday, April 28, 2016

பகுதி நேர வேலை தேடுவோர்க்கான ஆலோசனைகள் 02 - Tips for Jaffnaonline.info's job seekers

புதியவர்களுக்கானது - 21/22 வயதிற்குட்பட்ட  தொழில்   முன் அனுபவம் இல்லாதவர்களுக்கான ஆலோசனைகள். 

1) யாழ்ப்பாணத்தைப்பொறுத்தவரை மிகப்பெரிய உற்பத்தி நிறுவனங்கள் இல்லாமையால் குறித்த தொழில் திறமை சாரா பகுதி  நேர வேலைகள் என்பவை மிக மிகக் குறைவு. குறிப்பிட்ட ஒரு துறையில் திறனுள்ளவர்களுக்கு மட்டுமே பகுதி நேர வேலைகள் கி்டைக்கலாம்.

2)பகுதி நேர வேலை- உதாரணமாக கணினி வரைகலையில்(Graphic Designing with Tamil typing ) நிபுணத்துவம் உள்ளவர் ஒருவருக்கு அச்சகங்களில் பகுதி நேர வேலைவாய்ப்புக்கள் வழங்கப்படலாம். ஆனால் அவர் அத்துறையில் வெறுமனே சான்றிதழை வைத்திருக்காமல் உடனடியாக வேலை செய்யும் அனுபவ அறிவைக்கொண்டவராக இருக்க வேண்டும். 

3) முழு  நேர வேலைவாய்ப்பை விட பகுதி நேர வேலை வாய்ப்பிற்குத்தான் திறமைசாலிகள் தேவைப்படுவர்(வடக்கைப்பொறுத்த வரையில்) 

4)எனவே மாணவர்கள் மற்றும் பகுதி நேர வேலைகளைத்தேடுவோர் உங்கள் தகுதிகளை அதிகரித்துக்கொள்ளுங்கள். 

பின்வரும் வகையிலான பகுதி நேர வேலைகளே தற்போது அதிகம் காணப்படுகின்றன(எதிர்காலத்தில் நிலமை மாறலாம்) :

Wednesday, April 20, 2016

உடனடி வேலைவாய்ப்பு - விளம்பர இலக்கம் 10# - Marketing executives needed in Jaffna



கொழும்பைத்தலைமையகமாகக்  கொண்டு இயங்கும் மென்பொருள் வடிவமைப்பு நிறுவனத்திற்கு யாழ்ப்பாணத்தில் பணிபுரிய சநதைப்படுத்தல் உத்தியோகத்தர் தேவை. அடிப்படைச்சம்பளம் மற்றும் கொமிசன் அல்லது அடிப்படைச்சம்பளம் இல்லாத அதிக கொமிசன் என்ற இரண்டு கட்டமைப்பில் அவர் விரும்பியபடி வேதனத்தை தீர்மானிக்கலாம்.

அவர் பின்வரும் தகுதிகளையாவது கொண்டிருக்கவேண்டும்.


1)Age : below 30
2)Educational Qualifications : Minimum S for English in one sitting in G.C.E O/L    or Should  appear for an English assessment test during interview  and get thorough And Minimum 2 S passes in G.C.E. A/L in any stream .
3)Good communication skills
4)Good knowledge in MS Office
5)Should be able to use email systems .
6)Male/Female both can apply
7)Good knowledge on web / e-commerce will be an added advantage
8)Minimum 1 year working experience in any filed is preferable but not a must(Trainees - welcome to apply )



Thursday, March 17, 2016

சமூக சேவகர்கள் தேவை.

சமூக சேவகர்கள் தேவை.(Social workers to support Free Career Development and Career Guidance + Soft Skills Development Training )



14 வயதிலிருந்து 24 வயது வரைஉள்ளவருக்கான  அலுவலக நிர்வாகத்திற்கான மென்திறன்கள் மற்றும் திறனுள்ளவர்க்கான அலுவலக  நிர்வாகப்பயிற்சி என்பன கே.யு எடியுகேசன் நிறுவன உதவியுடன் ஜப்னாஒன்லைன் நிறுவனத்தின் ஊடாக முற்றிலும் இலவசமாக வழங்கப்பட உள்ளது.

பணமீட்டும் நோக்கின்றி தங்கள் ஓய்வு நேரங்களை உதவி தேவைப்படும் பல்வேறு வழிகளிலும் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு செலவழிக்க விரும்பும் நல்லுள்ளம் படைத்தவர்களை நாம் தேடுகின்றோம். 

தொழில் வாய்ப்புக்கான அடிப்படை அறிவை சுமார் 14 வயதிலிருந்தே - பாடசாலைக்கல்வியுடன் சேர்த்து வழங்கப்பட வேண்டும் என்பது எமது நிலைப்பாடு. ‌வடக்குப்பிரதேசத்தில் காணப்படும் வேலையில்லாப்பிரச்சினையின் அடிப்படைக்காரணியான - திறனுள்ளவேலையாட்கள் இல்லாமை எனும் பிரச்சனைக்குத் தீர்வாக தொழில் நிறுவங்களில் பணிபுரியத்தேவையான மென் திறன்களை வளர்க்கும் இலவச பயிற்சி நெறிகளை நாம் வழங்க இருக்கிறோம். ஆனால் அதை உணர்ந்து பயன் பெறுவோரைத்திரட்டவும் பயிற்சிக்காலத்தில் இணைந்து பணி புரியவும் தொண்டர்களை நாம் நாடி நிற்கிறோம். 

Sunday, September 20, 2015

தொழில் திறன் சான்றிதழ்ப் பயிற்சி.


Employment Eligibility Certificate by - Jaffnaonline
 [Tags : After A/L jobs in Jaffna ,Job vacancies in Jaffna ]

  1. உங்களுக்கு வேலைகிடைக்கவில்லையா ? பல நேர்முகத்தேர்வுகளை கடந்தாகி விட்டதா ?
  2. உங்களில் என்ன குறை ?
  3. தனியார் நிறுவனம் ஒன்றில் நல்ல சம்பளம் பெறும் நிலைக்கு நீங்கள் உயர வேண்டுமா ?

உங்கள் O/L ,A/L சித்திகள் வேலை பெறுதலுக்கான ஒரு தகுதியல்ல.நேர்முகத்தேர்வுகளில் உங்கள் பாடசாலைக்கல்வி மதிக்கப்படுவதில்லை என்பதையும் தொழில் திறன்கள் வினவப்படுவதையும் நீங்கள் அவதானித்திருப்பீர்கள்.அந்த திறன்களை வெறும் ஏழு நாட்களில் நவீன கற்பித்தல்  சூழலில் மேம்படுத்தி வாழ்வை வெல்ல ஒரு அரிய சந்தர்ப்பம்.

வர்த்தக முகாமைத்துவத்தில் முதுமாணிப்பட்டம் பெற்ற தொழில் விற்பன்னர்களால் நடாத்தப்படும் வேலைவாய்ப்பு -தொழில் திறன் சான்றிதழ் (முதல் நிலை)பயிற்சிநெறி  -வெறும் 7 நாட்களில் உங்கள் திறன்களை அதிகரித்துக்கொண்டு எம்மால் வழங்கப்படும் சான்றிதழையும் பெற்றுக்கொள்ளுங்கள். அதுவும் முற்றிலும் இலவசமாக. இதற்குரிய நிதி  யாழ் முன்னேற்றச்சங்த்தின் சுவிஸ் கிளையால் வழங்கப்படுகிறது.

இந்தச் சான்றிதழ் மூன்று நிலைகளை உடையது.

1)EEC-Entry Pass (முதல் நிலை -அடிப்படையான தொழில் திறன்கள்
2)EEC -Executive (இடைநிலை -(சுயமாக சிந்தித்து முடிவெடுத்து செயற்படக்கூடிய  நபர் நீங்கள் என்பதை இது உறுதிப்படுத்தும்
3)EEC-Upper Level மேல் நிலை.(முகாமையாளர்,உதவி முகாமையாளர், போன்ற உயர் தொழில் நிலைகளிற்கு நீங்கள் தகுதியானவர் என்பதை இது உறுதிப்படுத்தும்.)

முதலாவது சான்றிதழ் பெறும் உங்களிற்கு ஜப்னா ஒன்லைனால்  அடிப்படை நிலையிலான தொழில்கள் அலுவலகம் சார்ந்த அல்லது வெளி நிலையிலான  சூழலில் பெற்றுத்தரப்படும்.

பயிற்சியின் முடிவில் சான்றிதழ்கள் பெறுவதற்கு முன்னர் எம்மால் நடாத்தப்படும் பரீட்சையில் சித்தியடையவேண்டும். பயிற்சி நெறியில் கலந்து கொள்பவர்கள் நேர்முகத்தேர்வின் மூலம் தெரிவு செய்யப்படுவர்.

வயது வேறுபாடின்றி அனைவரும் கலந்து கொள்ளலாம்.

ஆனாலும் முதல் நிலைச் சான்றிதழ்(இலவச பயிற்சி நெறி) போதிய முன் அனுபவம் இல்லாத இளையோருக்கே முக்கியமானதாகும்.

”எமக்கு எல்லாம் தெரியும் ” என்றிருக்காமல் கற்பதற்கு எவ்வளவோ இருக்கிறது என்று இளையவர்கள் உணருவார்களாயின் யாழ்ப்பாணம் மற்றும் எமது இலங்கைத்திருநாடு உயரிய வளர்ச்சி பெறும்.


இந்தப்பயிற்நி நெறியில் கலந்து கொள்ள விரும்பின்:

1) உடனடியாக உங்கள் சுய விபரக்கோவை ஒன்றினை admin@jaffnaonline.info என்ற மின்னஞ்சலிற்கு இன்றே அனுப்பி வையுங்கள்.Call 0767302882 for more information

OR

2). எமது முகப்புத்தகத்தில் காணப்படும் இந்த விளம்பரத்தின் comments பகுதியில் ”I am coming”  என்று ரைப் செய்வதன் மூலம் உங்கள் வருகைய‌ை‌ உறுதிப்படுத்துங்கள்.  [http://facebook.com/jaffnaonline ] Application Closing Date : 24/09/2015