Sunday, August 21, 2016

நிறுவன அபிவிருத்தி உத்தியோகத்தர் - நிர்வாக முகாமையாளரின் காரிய தரிசி :Business Development Officer / Secretary for the MD

முன்னணி தனியார் நிறுவன மொன்றில் மேற்படி பதவி வெற்றிடம் உள்ளது.



நேர்முகத்தேர்வினில் பின்வருவனவற்றை ஒத்த கேள்விகள் கேட்கப்படும்

பின்வரும் கேள்விகளுக்கு நல்ல பதில்களை அளிக்கக் கூடிய வகையில் உங்கள் அறிவு மற்றும் அனுபவத்திறன் இருக்குமானால் (அனைத்துக்‌கேள்விகளையும் வாசித்து முடித்து விட்டு எம்மைத்தொடர்பு கொள்ளவும் )


1) வருவதற்கு முன்னர் எம்மைப்பற்றி அறிவதற்காக எமது நிறுவனத்தின் வெப்சைட்டைப் பார்வையிட்டீர்களா ?
2) எமது நிறுவனம் எவ்வாறான பணிகளில் ஈடு படுகிறது ?
3)எமது நிறுவனத்தின் முழுப்பெயர் சுருக்கமான குறியீட்டுப்‌பெயர் எவை ?
4)எமது நிறுவனத்தின் மிகப்பிரபலமான  சேவைகள் அல்லது உற்பத்திகள் சிலவற்றைக் குறிப்பிட்டு அவை ஏன் பிரபலம் என நீங்கள் கருதுவதையும் குறிப்பிட முடியுமா ?
5) நேர் முகத்தேர்விற்காக காத்திருக்கையில் உங்கள் முன் காணப்பட்ட எமது நிறுவனத்தின் துண்டுப்பிரசுரங்கள் - அறிவிப்புப்பலகைகள் என்பவற்றை வாசித்தீர்களா ?

6)அப்படியாயின் பின்வரும் கேள்விகளிற்கு பதில் சொல்லுங்கள்....1)....2).....3) (அந்த அறிவிவிப்புக்கள் சம்பந்தமான கேள்விகள்)


II

1)ஸ்டீவ் ஐொப் பற்றிய உங்கள் பார்வை என்ன ?
2)மைக்ரோ சொப்ற் நிறுவனத்தின் மிகப்பிரபல உற்பத்தி எது ?
3)இலங்கையின் எப்பகுதிகளிற்கு நீங்கள் உல்லாசப்பயணம் செய்திருக்கிறீர்கள் ?
4)தாய்மொழி மற்றும் ஆங்கிலம்  தவிர வேறு எந்த மொழிகளை ஓரளவாயினும் அறிந்திருக்கிறீர்கள் ? (சில சொற்கள் )
5)உங்களிற்கு எத்தனை உயிர் நண்பர்கள் இருக்கிறார்கள் - நட்பு பற்றிய உங்கள் பார்வை என்ன ?



தனியார் நிறுவனங்களில் சிறப்பாக செயற்பட சமயோசித புத்தி, பொது அறிவு ,விழிப்புணர்வு ,சிறந்த தொடர்பாடல் திறன் என்பன மிக முக்கியமானதாகும். இவற்றை உங்கள் பாடசாலைப்படிப்போ பெரும்பாலான பல்கலைக்கழகப் படிப்போ தந்து விடுவதில்லை - தேடல் கற்கும் வெறி போன்றன இயல்பாக அமைந்தவர்கள் இவற்றை  பெறுகிறார்கள்..இவை உங்களிற்கு இருக்குமாயின் மேற்படி  வகையான கேள்விகளை கையாள முடியும் என நம்பினால் ... வயது மற்றும் பால் வேறுபாடின்றி  யாரும் எம்மைத் தொடர்பு கொள்ளுங்கள். உங்கள் கல்விச்சான்றிதழ்கள் கருத்தில் எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது.

நீஙக்ள விரும்புவது போலவே நல்ல வேலை நல்ல சம்பளம் தொடர்ச்சியான வளர்ச்சி இருக்கும்.

உங்கள் சுய விபரக்கோவையை அண்மையில் எடுத்த படத்துடன் admin@jaffnaonline.info என்ற மின்னஞ்சலிற்கு BIZ-Dev(Subject) என தலைப்பிட்டு அனுப்பி வைக்கவும். நாம் உங்களைத் தொடர்பு கொள்வோம்.(We will call you asap - please provide us a working telephone number in your CV)

( பலரும் செய்வது போல் தம் தகுதிகளைப்பற்றி கவலைப்டாமல் தொலைபேசியில் அழைத்து ..அந்த வேலைக்கு எவ்வளவு சம்பளம் என்ற வகையிலான கேள்விகளை கேட்கவேண்டாம். முதலில் அந்த ‌ வேலைக்கு நீங்கள் தகுதியானவரா என்பதை பார்ப்போம். தகுதிக்கேற்ற சம்பளம் இலலாமல் தகுதியானவர்கள் வேலை செய்ய மாட்டார்கள் என்பது வெளிப்படை உண்மை)

No comments:

Post a Comment