Sunday, September 20, 2015

தொழில் திறன் சான்றிதழ்ப் பயிற்சி.


Employment Eligibility Certificate by - Jaffnaonline
 [Tags : After A/L jobs in Jaffna ,Job vacancies in Jaffna ]

  1. உங்களுக்கு வேலைகிடைக்கவில்லையா ? பல நேர்முகத்தேர்வுகளை கடந்தாகி விட்டதா ?
  2. உங்களில் என்ன குறை ?
  3. தனியார் நிறுவனம் ஒன்றில் நல்ல சம்பளம் பெறும் நிலைக்கு நீங்கள் உயர வேண்டுமா ?

உங்கள் O/L ,A/L சித்திகள் வேலை பெறுதலுக்கான ஒரு தகுதியல்ல.நேர்முகத்தேர்வுகளில் உங்கள் பாடசாலைக்கல்வி மதிக்கப்படுவதில்லை என்பதையும் தொழில் திறன்கள் வினவப்படுவதையும் நீங்கள் அவதானித்திருப்பீர்கள்.அந்த திறன்களை வெறும் ஏழு நாட்களில் நவீன கற்பித்தல்  சூழலில் மேம்படுத்தி வாழ்வை வெல்ல ஒரு அரிய சந்தர்ப்பம்.

வர்த்தக முகாமைத்துவத்தில் முதுமாணிப்பட்டம் பெற்ற தொழில் விற்பன்னர்களால் நடாத்தப்படும் வேலைவாய்ப்பு -தொழில் திறன் சான்றிதழ் (முதல் நிலை)பயிற்சிநெறி  -வெறும் 7 நாட்களில் உங்கள் திறன்களை அதிகரித்துக்கொண்டு எம்மால் வழங்கப்படும் சான்றிதழையும் பெற்றுக்கொள்ளுங்கள். அதுவும் முற்றிலும் இலவசமாக. இதற்குரிய நிதி  யாழ் முன்னேற்றச்சங்த்தின் சுவிஸ் கிளையால் வழங்கப்படுகிறது.

இந்தச் சான்றிதழ் மூன்று நிலைகளை உடையது.

1)EEC-Entry Pass (முதல் நிலை -அடிப்படையான தொழில் திறன்கள்
2)EEC -Executive (இடைநிலை -(சுயமாக சிந்தித்து முடிவெடுத்து செயற்படக்கூடிய  நபர் நீங்கள் என்பதை இது உறுதிப்படுத்தும்
3)EEC-Upper Level மேல் நிலை.(முகாமையாளர்,உதவி முகாமையாளர், போன்ற உயர் தொழில் நிலைகளிற்கு நீங்கள் தகுதியானவர் என்பதை இது உறுதிப்படுத்தும்.)

முதலாவது சான்றிதழ் பெறும் உங்களிற்கு ஜப்னா ஒன்லைனால்  அடிப்படை நிலையிலான தொழில்கள் அலுவலகம் சார்ந்த அல்லது வெளி நிலையிலான  சூழலில் பெற்றுத்தரப்படும்.

பயிற்சியின் முடிவில் சான்றிதழ்கள் பெறுவதற்கு முன்னர் எம்மால் நடாத்தப்படும் பரீட்சையில் சித்தியடையவேண்டும். பயிற்சி நெறியில் கலந்து கொள்பவர்கள் நேர்முகத்தேர்வின் மூலம் தெரிவு செய்யப்படுவர்.

வயது வேறுபாடின்றி அனைவரும் கலந்து கொள்ளலாம்.

ஆனாலும் முதல் நிலைச் சான்றிதழ்(இலவச பயிற்சி நெறி) போதிய முன் அனுபவம் இல்லாத இளையோருக்கே முக்கியமானதாகும்.

”எமக்கு எல்லாம் தெரியும் ” என்றிருக்காமல் கற்பதற்கு எவ்வளவோ இருக்கிறது என்று இளையவர்கள் உணருவார்களாயின் யாழ்ப்பாணம் மற்றும் எமது இலங்கைத்திருநாடு உயரிய வளர்ச்சி பெறும்.


இந்தப்பயிற்நி நெறியில் கலந்து கொள்ள விரும்பின்:

1) உடனடியாக உங்கள் சுய விபரக்கோவை ஒன்றினை admin@jaffnaonline.info என்ற மின்னஞ்சலிற்கு இன்றே அனுப்பி வையுங்கள்.Call 0767302882 for more information

OR

2). எமது முகப்புத்தகத்தில் காணப்படும் இந்த விளம்பரத்தின் comments பகுதியில் ”I am coming”  என்று ரைப் செய்வதன் மூலம் உங்கள் வருகைய‌ை‌ உறுதிப்படுத்துங்கள்.  [http://facebook.com/jaffnaonline ] Application Closing Date : 24/09/2015



Monday, March 30, 2015

யாழ்ப்பாண வேலைவாய்ப்பு -உடனடித் தேவைகள் -மார்ச்-2015(01)

கம்பியூட்டர் கிராபிக்ஸ் கற்று அனுபவ அறிவு (குறைந்தது ஆறு மாதம் ) இருப்பின் உங்களுக்கு 15 ஆயிரம் ரூபாய்க்கு மேற்பட்ட சம்பளத்துடனான வேலைவாய்ப்புக்கள் காத்திருக்கின்றன.

ஜப்னா இன்போ வேலைவாய்ப்பு வங்கியில் மட்டுமே 5 வெற்றிடங்கள் உள்ளன. எமது சேவை பெறும் நிறவனங்கள் யாழப்பாணத்தின் முன்னணி அச்சுத்துறை நிறுவனங்களாகும். அவை தமது அலுவலகத்தில் பக்க வடிவமைப்பாளராக கடமையாற்ற பணியாளர்களை தேடுகிறார்கள்.  உங்களுக்கும் பின்வரும் மென்பொருட்களில் போதிய அனுபவம் இருப்பின் உடன் விண்ணப்பியுங்கள் .

1)Adobe Photoshop
2)Corel Draw
3)Adobe in design
4)Type Setting in Tamil 

Apply at http://jobs.jaffnaonline.info/ or email admin@jaffnaonline.info

Sunday, March 22, 2015

Jaffnaonline.info இல் வேலைக்கு விண்ணப்பிக்கும் முன்னர் நீங்கள் வாசித்திருக்க வேண்டிய (பலர் வாசிக்காது விடும் -குறிப்புக்கள்)

விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்
  • பொய்யான விபரங்கள் எதையும் தர வேண்டாம்.
  • தொடர்பு விபரங்கள் முக்கியம்-பெரும்பாலானவர்கள் தங்கள் ஈமெயிலை அடிக்கடி பார்க்கும் வழக்கம் இல்லாமையால் ,நாம் தொலைபேசி ஊடாகவே உடனடி வேலை வாய்ப்புக்கள் சம்பந்தமாக தொடர்பு கொள்வோம். எனவே தாங்கள் வழ‌ங்கும் தொலைபேசி இலக்கம் இயங்கும் இலக்கமாகவும் ,வேறு நபருடைய இலக்கமாக இருக்கும் பட்சத்தில் அவர் உங்களுக்கு பொறுப்பாக அறிவிக்க கூடியவராகவும் பார்த்துக்கொள்ளுங்கள்.
  • அண்மையில் எடுத்த தெளிவான வர்ணப்புகைப்படம் ஒன்றை இணைப்பது சிறந்த பெறுபேற்றை வழங்கும் , விண்ணப்பதாரியின் தோற்றம் (அழகு அல்ல)பல வேளைகளில் தொழில் தருபவர்களுக்கு நல்ல அபிப்பிராயங்களை வழங்கும்,எனவே விரைவான நேர்முகத்தேர்வு ஒன்றிற்கு நீங்கள் அழைக்கப்படலாம். இது கட்டாயமல்ல.
  • சிறந்த சுய விபரக்கோவை ஒன்றின் மாதிரிக்கும் வழிகாட்டலுக்கும் ,CV Preparation guide என்ற லிங்கை கிளிக் செய்யலாம்
  • அனுபவம் கல்வித்தகுதி ,வேலை தேடும் துறையில் உள்ள அங்கிகரிக்கப்பட்ட தொழில் கல்வி அடிப்படையில் நியாயமான சம்பள எதிர்பார்ப்பை குறிப்பிடுங்கள்.[ அனுபவம் எதுவுமில்லாமல் A/L வரை படித்த பலர் 40,000 முதலிய சம்பள எதிர்பார்ப்புக்களை குறிப்பிடுகின்றனர். உரிய தொழில் அனுபவம் அற்றவர்களுக்கு இப்படியான சம்பளத்தை யாரும் வழங்க மாட்டார்கள்.]
  • உங்கள் ஈமெயில் முகவரி மற்றும் தொலைபேசி இலக்கங்கள் ஆகிய இரண்டுமே கட்டாயமாக சரியாக வழங்கப்பட வேண்டும். தேவை மற்றும் அவசரங்களைப்பொறுத்து பொருத்தமான தொடர்பாடல் முறையை நாம் கையாள்வோம்.
  • குறிப்பிட்ட தொழில் பிரிவை விபரமாக குறிப்பிடவும். Your Covering Letter/Intro/Remarks(if any) என்ற பகுதியில் உங்களுக்கு தெரிந்த துறையை பற்றி குறிப்பிடவும். உதாரணமாக IT-Software என்று விரும்பிய தொழில் என்ற பகுதியில் குறிப்பிட்டால் பின்னர் ntro/Remarks என்ற பகுதியில் Programming-PHP /Graphic Design-Photo shop,illustrator /Hardware Technician என்று உங்களிற்கு நன்கு தெரிந்த துறையை குறிப்பிடவும் . இது உங்களை நாம் நேர்முகத்தேர்வு ஒன்றிற்கு அழைக்கும் சந்தர்ப்பத்தை அதிகரிக்கும்.
  • உங்கள் தொழில் அனுபவங்கள்,தொடர்பு விபரங்களில் மாற்றமேற்‌படும் பொழுதெல்லாம் மீண்டும் மீண்டும் http://jobs.jaffnaonline.info இணையத்தளம் மூலமாக விண்ணப்பங்களாக தங்கள் விபரங்களையும் ,சுய விபரக்கோவையையும் அனுப்பி வைக்கலாம்.
  • இந்த தொழில் தேடும் சேவையானது தொழில் தேடுவோர்க்கு (உங்களுக்கு) முற்று முழுவதும் இலவசமான சேவையாகும். ஜப்னா ஒன்லைன் நிறுவனத்தையோ அல்லது அதனது சகோதர நிறுவனங்களையோ அவற்றின் ஊழியர்களையோ இச்சேவை பற்றி மேலதிக விபரங்களுக்காக தொடர்பு கொள்ள வேண்டாம். ‌
  • இது பற்றி மேற்கொள்ளப்படும் தொலைபேசி அழைப்புக்கள் எவற்றிற்கும் பதில் வழங்கப்படமாட்டாது. இச்சேவையை வழங்குவதும் ,இடை நிறுத்துவதும் ஜப்னா ஒன்லைன் இணைய நிறுவனத்தின் சுய விருப்பத்துடன் எடுக்கப்படும் முடிவுகளாகும்.
இந்த விபரங்கள் பின்வரும் எமது வேலை வாய்ப்பு விண்ணப்ப பகுதியில் உள்ளவையாகும் : http://jobs.jaffnaonline.info/jobs_step1.html (As per March -2015)-This information can be updated time to time .

Thursday, March 19, 2015

ஏன் நம்மில் பலருக்கு ‌வேலை கிடைப்பதில்லை ? சில பயனுள்ள குறிப்புக்கள்-01

ஏன் நம்மில் பலருக்கு ‌வேலை கிடைப்பதில்லை ? சில பயனுள்ள குறிப்புக்கள் jaffnaonline.info/jobs(Job Bank of Jaffna) இன் அனுபவத்திலிருந்து.
Marketing Jobs are available - But Jaffna people are not interested. As it needs intelligence ,creativity ,innovation ,hardworking ,result oriented individuals .

மாக்கெற்றிங் வேலை என்பது வீடு வீடாகச்சென்று பொருட்களை விற்பது அல்ல ...அதற்குப்பெயர் டோர் ரு டோர் சேல்ஸ்(Door to Door Sales). ‌தென்னிலற்கையில் இருந்து வந்த பல ஏமாற்றும் நிறுவனங்கள் ”மாக்கற்றிங் ரெயினிங்” கொடுக்கிறோம் ஆறு மாதங்களில் அறுபதினாயிரம் சம்பாதிக்கலாம் என்று எங்கள் இளையவர்களின் பேராசையை துாண்டி ,வீடு வீடாக தும்புத்தடியும் ,பேனாக்கத்தியும் விற்க வைத்தார்கள். கொழும்பு கண்டி போன்ற பெரிய நிறுவனங்களோ அவை செய்யும் தரத்தினாலான மாக்கற்றிங் தொழில்களோ இங்கில்லாததால் யாழ்ப்பாண இளைஞர்கள் எல்லாம் மாக்கெற்றிங் என்று சொன்னாலே பின்னங்கால் பிடறியில் அடிபட ஓடுகிறார்கள். (If anyone can earn 60,000 easily wihout any qualificaitons why do you need to go to university or colleges and eanr degrees etc ? )

மாக்கெற்றிங் துறையில் பணிபுரிய

1) சொந்த புத்தி
2)பொது அறிவு
3) உலக அறிவு
4)புதிய விடையங்களை உடனுக்குடன் கற்றுக்கொள்ளும் தன்மை
5) சிறந்த மொழியாற்றல்
6)CIM/SLIM like qualifications

என்பவை அவசியம் . ஆகவே அந்த தொழிலை நீங்கள் சும்மா நினைக்க வேண்டாம்.

அதிக சம்பளம் விரைவான வளர்ச்சி தரக்கூடிய துறை மாக்கெற்றிங் மட்டுமே.
இதற்கான அங்கிகரிக்கப்ட்ட பாட நெறிகளான CIM-UK,SLIM-LK,(PCM).... போற்றவற்றில் ஏதோ ஒன்றையாவது கற்றுவைத்திருங்கள். பின்னர் அதன் அருமையும் புரியும் மதிப்பும் தெரியும்.

Clerical Jobs/Office Assistant Jobs-Office Jobs

இருந்த இடத்தில் வேலை . செய்ததை திரும்பச்செய்யக்கூடியதாக இருக்க வேண்டும் என்றுதான் எல்லா விண்ணப்பதாரிகளும் எதிர்பாக்கிறார்கள்.தவறில்லை. தனியார் துறையில் அப்படியான வேலைக்கு அதிக சம்பளம் கிடைக்காது. எல்லாரும் செய்யக்கூடிய இலகுவான வேலைக்கு உங்களுக்கு ஏன் அதிக சம்பளம் தர வேண்டும் ? என்று யோசித்துப்பாருங்கள். எனவே தகுதியை வளத்துக்கொள்ளுங்கள் அப்புறம் ஆசைப்படுங்கள்.

Receptionist :

ரிசப்ஷனிஸ்ட் வேலை என்றால் பெரும்பாலும் பெண்ணாக இருக்க வேண்டும் ,இளமையாகவும் வருவோரை அக்கறைாயக விசாரித்து தேவையானவற்றை அவர்களுக்கு செய்து கொடுக்கக்கூடிய துடி துடிப்பும் வேண்டும். கட்டாயம் கொஞ்சம் பார்க்க இலட்சணமாக இருக்க வேண்டும். எந்த பெரிய நிறுவனத்தினது வரவேற்பாளர்களையும் நீங்கள் பாருங்கள். அவர்களிடம் இருக்கும் பொதுமைக் குணங்களை அவதானியுங்கள். நல்ல தோற்றம் என்பது நாம் வேண்டிப்பெறுவதல்ல ,இயற்கையாக அமைவது . எனவே இந்த தொழிலுக்கு குறித்த சிறு எண்ணிக்கையானோரே தகுதி பெறுவர். எனவே கல்வித்தகுதிகள் பற்றி அதிக அக்கறையின்றி சுயபுத்தியும் கம்பியூட்டர் மற்றும் ஆங்கில அறிவிருந்தால்கொஞ்சம் அதிக சம்பளத்தை இவர்கள் எதிர்பார்க்கலாம். 

வெறும் A/L படிப்பை வைத்து எந்த தொழிலை உங்களால் செய்ய முடியும். ? Learn and learn .increase the qualification then expect more . otherwise work for free for few months and learn from working . Who is ready to work for free and learn ?(probably no one here in Jaffna )

வேலைக்கு விண்ணப்பிக்கும் போது பொய் சொல்லாதீர்கள் !



தெரியாதததை தெரியும் என்று சொல்வது எவ்வளவு தப்பு. கார் ஓட்டத்தெரியுமா என்று கேட்டால் கார் ஓட்டும் வகுப்பிற்கு சென்ற சான்றிதழ் இருக்கும் காரணத்தால் தெரியும் என்று சொல்லி விடாதீர்கள். அப்புறம் காரை உங்கள் கையில் தந்து கண்டிக்கு சென்றுவரச்சொன்னால் நீங்கள் அடிபட்டுச்சாக வேண்டி வரும்.

நாங்கள் செய்யும் பல நேர்முகத்தேர்வுகளில் ஓரளவு அறிமுகம் உள்ள துறைகளையெல்லாம் டிப்ளோமா என்னும் பெயா போட்டு நிரப்பிய சுய விபரக்கோவைகளை அனு தினம் பார்வையிடுகிறோம்.

அண்மையில் பிரபல அச்சு நிறுவனமொன்று தமக்கு உடனடியாக கணினி வரைகலை தெரிந்தவர் (Graphic design-photoshop/corel draw,illustrator )ஒருவர் தேவை என குறிப்பிட்டனர். (சம்பளம் சுமார் 18,000 ஆயிரம ரூபாய்கள்) எமது இணைய விண்ணப்பதாரிகளின்(http://jobs.jaffnaonline.info/)  விபரங்களை தேடிய‌ போது சுமர் 43 பேர் தாம்  Graphic Designing  என்ற பயிற்சி நெறியில் சான்றிதழ் வைத்திருப்பதாயும் சுமார் 8 பேர் அத்துறையில் பணிபுரிய விருப்பம் என்றும் குறிப்பிட்டிருந்தனர்.

தொடர்பு கொண்டபோது அவர்களில் இருவரைத்தவிர யாருமே அத்துறையில் பணியாற்றும் அளவிற்கு அறிவை கொண்டிருக்கவில்லை என்று அவர்களாகவே ஒப்புக்கொண்டனர்.

1)நாம் அவர்களிற்கு உதவுவதற்காக அவர்களை அழைத்து ,‌பேசி எவ்வளவு நேர விரையம் !
2)நீங்கள் என்னதான் கற்றிருந்தாலும் அதில் சிறப்புத்தேர்ச்சி இல்லை என்றால், டிப்ளோமா(Diploma in Graphic design..etc..) என்ற சொல்லால் அதைக்குறிக்காமால் -Sound Knowledge in Graphic designing /Sound Knowledge in Photoshop etc..   என்று குறிப்பிடுவதே சிறந்தது. (உங்கள் சான்றிதழ்  -Diploma அந்தப்பெயரில்தான் இருக்கும் - அது இரண்டு ஆண்டுகள் முழுநேரக்கல்வியாக இருந்தால் மட்டுமே ஏற்றுக்கொள்ளக்கூடிய டிப்ளோமா)