Sunday, August 21, 2016

நிறுவன அபிவிருத்தி உத்தியோகத்தர் - நிர்வாக முகாமையாளரின் காரிய தரிசி :Business Development Officer / Secretary for the MD

முன்னணி தனியார் நிறுவன மொன்றில் மேற்படி பதவி வெற்றிடம் உள்ளது.



நேர்முகத்தேர்வினில் பின்வருவனவற்றை ஒத்த கேள்விகள் கேட்கப்படும்

பின்வரும் கேள்விகளுக்கு நல்ல பதில்களை அளிக்கக் கூடிய வகையில் உங்கள் அறிவு மற்றும் அனுபவத்திறன் இருக்குமானால் (அனைத்துக்‌கேள்விகளையும் வாசித்து முடித்து விட்டு எம்மைத்தொடர்பு கொள்ளவும் )


1) வருவதற்கு முன்னர் எம்மைப்பற்றி அறிவதற்காக எமது நிறுவனத்தின் வெப்சைட்டைப் பார்வையிட்டீர்களா ?
2) எமது நிறுவனம் எவ்வாறான பணிகளில் ஈடு படுகிறது ?
3)எமது நிறுவனத்தின் முழுப்பெயர் சுருக்கமான குறியீட்டுப்‌பெயர் எவை ?
4)எமது நிறுவனத்தின் மிகப்பிரபலமான  சேவைகள் அல்லது உற்பத்திகள் சிலவற்றைக் குறிப்பிட்டு அவை ஏன் பிரபலம் என நீங்கள் கருதுவதையும் குறிப்பிட முடியுமா ?
5) நேர் முகத்தேர்விற்காக காத்திருக்கையில் உங்கள் முன் காணப்பட்ட எமது நிறுவனத்தின் துண்டுப்பிரசுரங்கள் - அறிவிப்புப்பலகைகள் என்பவற்றை வாசித்தீர்களா ?

Wednesday, August 10, 2016

இது ‌ஐப்னாஒன்லைன் முகப்புத்தகப்பக்கத்தில் பதிவிடப்பட்டது. பல இணையத்தளங்கள் எங்கள் பெயர் குறிப்பிடாமல் இதை மீள் பிரசரம் செய்துள்ளன. ”யார் குத்தியும் அரிசியானால் சரி” என்பது போல் நல்ல கருத்துக்கள் எவர் மூலமாகப்பரவினாலும் சரி.


அன்புள்ள புலம் பெயர் உறவுகளே!

தயவு செய்து தண்டச்சோறு தின்ன பணம் அனுப்ப வேண்டாம். வெறுமனே எந்த உடலுழைப்புமின்றி வெறும் வாங்கித்தின்னும் சமூகமாக எம்மை மாற்ற வேண்டாம்.
யாழ்ப்பாணத்தில் வேலைவாய்ப்புக்கள் கொட்டிக்கிடக்கிறது. ஆனால் வேலை செய்யத்தான் ஆட்கள் இல்லை .
”.அந்த வேலை அப்படி,இந்த வேலை இப்படி ,எனது படிப்புக்கேற்ற வேலை இல்லை இது...படித்துக்கொண்டே வேலை செய்வதா ? ” என்றே பெரும்பாலான வேலை தேடுவோர் இங்கு கேட்கின்றனர். தினசரி பல வேலை தேடுவோரை நேர் முகத்தேர்வுகள் மூலம் சந்திப்பதால் நாம் இதை நன்கறிவோம். அரச உத்தியோகம் மற்றும் கிளார்க் உத்தியோகம் என்ற இரண்டையே குறி வைத்து இவர்களது கேள்விகள் அமைகிறது. (வெளியே போற வேலை எண்டா வேண்டாம்..ஓபீசுக்கேயே இருந்து செய்யிறமாதிரி வேலை எண்டாத்தாங்கோ ..)