Thursday, April 28, 2016

பகுதி நேர வேலை தேடுவோர்க்கான ஆலோசனைகள் 02 - Tips for Jaffnaonline.info's job seekers

புதியவர்களுக்கானது - 21/22 வயதிற்குட்பட்ட  தொழில்   முன் அனுபவம் இல்லாதவர்களுக்கான ஆலோசனைகள். 

1) யாழ்ப்பாணத்தைப்பொறுத்தவரை மிகப்பெரிய உற்பத்தி நிறுவனங்கள் இல்லாமையால் குறித்த தொழில் திறமை சாரா பகுதி  நேர வேலைகள் என்பவை மிக மிகக் குறைவு. குறிப்பிட்ட ஒரு துறையில் திறனுள்ளவர்களுக்கு மட்டுமே பகுதி நேர வேலைகள் கி்டைக்கலாம்.

2)பகுதி நேர வேலை- உதாரணமாக கணினி வரைகலையில்(Graphic Designing with Tamil typing ) நிபுணத்துவம் உள்ளவர் ஒருவருக்கு அச்சகங்களில் பகுதி நேர வேலைவாய்ப்புக்கள் வழங்கப்படலாம். ஆனால் அவர் அத்துறையில் வெறுமனே சான்றிதழை வைத்திருக்காமல் உடனடியாக வேலை செய்யும் அனுபவ அறிவைக்கொண்டவராக இருக்க வேண்டும். 

3) முழு  நேர வேலைவாய்ப்பை விட பகுதி நேர வேலை வாய்ப்பிற்குத்தான் திறமைசாலிகள் தேவைப்படுவர்(வடக்கைப்பொறுத்த வரையில்) 

4)எனவே மாணவர்கள் மற்றும் பகுதி நேர வேலைகளைத்தேடுவோர் உங்கள் தகுதிகளை அதிகரித்துக்கொள்ளுங்கள். 

பின்வரும் வகையிலான பகுதி நேர வேலைகளே தற்போது அதிகம் காணப்படுகின்றன(எதிர்காலத்தில் நிலமை மாறலாம்) :

1)காவலாளி
2)உணவு பரிமாறுபவர்கள்
3)தனியார் தபால் பொதி ‌விநியோகத்தர்
4)பொருட்கள் சேவைகள்  சந்தைப்படுத்துனர்
5)காப்புறுதி சந்தைப்படுத்துவோர்
6)வாகனச்சாரதிகள்

No comments:

Post a Comment